காதலர் தினத்தில் தோற்றவன்

ஒருவேளை அவள் என் காதலை
ஏற்றுக் கொண்டிருந்தால்
என் கவிதைகள்
அனைத்து இறந்திருக்க கூடும்..!
என் காதலை அழித்து
என் கவிதைகளுக்கு உயிர்
கொடுத்தவளே..
அன்று ஒரு காதலனாய்
தோற்றிருந்தாலும்
இன்று ஒரு கவிஞனாய்
ஜெயித்துவிட்டேன்..!
ஒரு தலை ராகம்
❤சேக் உதுமான்❤