நினைவுகளின் நெடுந்தூரம்

கண்மணியே காதலியே அயலார் தேசத்திலும் என்னை ஆர்ப்பரிக்க செய்கிறாய்

பசிக்கும் வேலையில் புசிக்க மறந்து அன்னம் நிறப்பி செல்கிறாய்
உந்தன் நினைவுகளால்

செல்லிடைபேசி சினுங்கி சிலிர்த்து எழுகிறேன் உறக்கம் கலைந்து உந்தன் ஓசையின் ஒரு வார்த்தை லவ் யூ டா ஓராயிரம் பாசிட்டிவ் எனர்ஜியை என்னுள் புகுத்தி போகிறது

அலைபேசியில் அவளின் அன்பு வார்த்தைக்காக அத்தனை முறை அழைத்திருந்தேன். கடைசி நிமிட ஏற்புக்குப்பின் சில நிமிட மவுனம் .
என்னவளோ என்ற ஏக்கப் பரிதவிப்பும், அவனின் அண்ணனா என்ற அச்சமும், தந்தையோ என்ற தயக்கமும்,
என்ன பயந்துட்டியா என்ற பாசத்துக்குரிய அவளின் கிளி ஓசை. கிளர்ச்சியுற்றது என் மனம்
ஒருசில பேசா நிமிட மௌனம்
பல யுக கனவுலகம் எனக் கடக்கிறது காலங்கள்
அயலர் தேசத்தில் அன்னியனாய் நெடுந்தொலைவில் நீங்கா கனவுகளுடன்.

எழுதியவர் : sivakumar (15-Feb-18, 7:38 am)
பார்வை : 122

மேலே