ஆசை
நான் நானாக வாழ ஆசை
ஆனால் ஆணவம் என்பார்கள்
நாலு வார்த்தை நறுக்கென கேட்க ஆசை
ஆத்திரக்காரி என்பார்கள்
தவறைத் தட்டிக் கேட்க ஆசை
திமிர் பிடித்தவள் என்பார்கள்
முன்னாென்று பின்னாென்று பேசுவாேரின்
முகத்திரை கிழிக்க ஆசை
முகமூடிகளை மாற்றி விடுகிறார்கள்
என்னை நானே மாற்றிக் காெள்வதால்
எனக்காக வாழ முடியவில்லை
ஏதாே வாழ்கிறேன்.....
ஆனால் இது நானில்லை