மலர்மாலையின் பாமாலை

மலர் மாலையின் பாமாலை..!
===========================

மாலையிலே வானில்மறையும் கதிரவனின் மதிமயக்கும்..
.
..........மனதைக்கவரும் சிவப்பழகைக் கண்குளிரக் காண்பீர்.!
.
காலையிலே மறைகின்ற வெண்ணிலவின் வெளிச்சமும்..
.
..........கருநீலத்தில் விடை பெறுமழகையும் கண்டுகளிப்பீர்.!
.
ஓலைக்கீற்றுகள் ஒன்றோடொன்று உரசியெழுப்பும் கீத..
.
..........ஒலியில் புள்ளினங்கள் சேர்ந்து பாடுவதை ரசிப்பீர்.!
.
மாலையிலே சேர்கின்றபல வண்ணமிகும் மலர்களின்..
.
..........மனமீர்க்கும் வாசனையைக் கண்டுணர்ந்து நுகர்வீர்.!
.
.
.
.
ஒருசோலையிலே பலவண்ண நிறத்தில் மலர்ந்தாலும்..
.
..........ஒன்றான மாலையாகச் சேர்ந்தால்தான் மதிப்பாகும்.!
.
பெருமானின் தலையிலோ காலடியிலோ கிடந்தாலும்..
.
..........பெருமை தானெங்களுக்கு சிறுமையில்லை அவனின்..
.
கிருபையால் எமக்கெங்கு சென்றாலும் பெருமைதான்..
.
..........கருணைக்கும் அன்புக்கும் அடையாளச் சின்னம்!யாம்
.
தரும் சுகத்திற்கோர் எல்லையுமுண்டோ இவ்வுலகில்..
.
..........தாரணியில் நிகழும் எவ்விழாவிற்கும் யாம்தலைமை.!

======================================================

வல்லமை படக்கவிதைக்காகச் சமர்ப்பிவிக்கப்பட்டது

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (15-Feb-18, 3:29 pm)
பார்வை : 65

மேலே