காலம் மாறும்

நீ என் வாழ்வில்
தற்காலிகமானவன்
என்னும் பொழுது
நீ தந்த காயங்கள் மட்டும்
எப்படியடா
நிரந்தரமானதாக இருக்கும்
நிச்சயம் காயங்களெல்லாம்
ஆறும் காலம் வரும்
காத்திருப்பேன் அது வரைக்கும்......

எழுதியவர் : கிருத்திகா (15-Feb-18, 11:06 pm)
Tanglish : kaalam maarum
பார்வை : 621

மேலே