ஏக்கத்தில் ஒரு விவசாயி

அது ஒரு காலம்...
தவறாமல் மழை பொழியும்
தரணியெங்கும் மகிழ்ச்சி பொங்கும்
வயல்வெளிகளில் வளர்ச்சி இருக்கும்
வறட்சி என்பதே இறந்திருக்கும்

இந்த காலத்தில்
மழை வேண்டி காத்திருக்கோம்
மரணத்தை எதிர்பாத்திருக்கோம்
விளைநிலங்கள் விற்று தீர்ந்தது
வறட்சி விஸ்வரூபம் எடுத்து வந்தது.

அந்த காலம் எங்கே போனது
மாறிக் கொண்டிருக்கும்
கணிணி உலகம்
கட்டிப் போட்டுவிட்டதோ
காலத்தின் கைகளை...

எழுதியவர் : தங்க பாண்டியன் (17-Feb-18, 11:28 am)
பார்வை : 197

மேலே