ஆன்ம லட்சியம்
" சத்தியமே லட்சியமாய் கொள்ளடா.
தலை நிமர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா. ",என்று தொடங்கும் பாடல் வரிகள் இன்னும் என் மனதில் அடிக்கடி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
ஏன் பிறந்தோம்?
எதற்காக வாழ்கிறோம்?
எதை நோக்கி ஓடுகிறோம்?
என்று பல கேள்விகளால் அடிக்கடி என் மனதில் யுத்தம் செய்கிறேன்.
விடைகள் கிடைக்கும் நாள் எந்நாளோ என்ற எதிர்பார்ப்பில் வாழாமல் கிடைத்த விடைகளைக் கொண்டு ஆண்டவன் ஆசியோடு என்னில் சீர்திருத்தங்களைத் தொடங்கிவிட்டேன்.
இறைவன் என்னிடம் எதையாவது சொல்ல விரும்பினால் என்னிடம் சொல்வார்.
உன்னிடம் எதையாவது சொல்ல விரும்பினால் உன்னிடம் சொல்வார்.
அவருக்கும், நமக்கும் இடையே இடைத்தரகர் என்று ஒருவர் தேவையில்லை.
தன் பொருளை விற்பது எப்படி வியாபாரமோ, அதே போல் தன் அறிவை விற்பதும் வியாபாரம் தான்.
விலையில்லாமல் நான் அறிந்ததை சொல்வதால் உங்களின் பார்வையில் இதற்கு மதிப்பில்லாமல் போகலாம்.
ஆனால், இறைவனின் இதயத்தில் இதன் மதிப்பு பெரிது.
அதனால், அவனுடைய அன்புக்கு நான் தகுதியுடையவனாகிறேன்.
இறைவனின் அன்பே கிடைத்துவிட்டதென்றால் அதைவிட ஆனந்தம் எனக்கேது?
அன்பே சிவம்.
சிவமே அன்பு.
அன்பே ஹரி.
ஹரி அன்பு.
அல்லா என்பதே அன்பு.
ஏதுமில்லை என்றாலும் அன்பு உள்ளது.