மை கிட்டும் வரை

அகத்தில் ஆயிரம்
கோடிட்ட இடங்கள்
நிரைநிரப்பும் தொணிவில்.,
புறமோ கனவுகளை
குத்தகைக்கு வாங்கியபடி,
முன்வினை ஈனும்
பல உருவில் வட்டி,
நிரைநிரப்பாவரை
புறம் நிறக்கும் வெட்டி,
நீர் எளிமையாய் யூகம்
தொடுத்தாலும்
யாம் கடுமைதான்
நினையாயீர்!
புறம் மாறும்
அகம் தெரியேர்
கேளீர் ஒருநாழி
அகத்தில் ஆயிரம்
கோடிட்ட இடங்கள்,
எளிமையிற்நீர்
எழுதிக்கொள்ளுங்கள்
என் எழுதுகோலுக்கு
மைகிட்டும் வரையில்,
நீர் நிரப்பின் முழுமையோ?
எம்
புறம் நிறப்பும்
உமக்கு யான் வெட்டி.
எளிமையிற்நீர்
எழுதிக்கொள்ளுங்கள்
என் எழுதுகோலுக்கு
மைகிட்டும் வரையில்.
-