என்னென்ன
என்னவாய் இருக்கும்
சொல்லியவை யாவும்
சொன்னபடியே
சொல்லாதவைகளும்
சொல்லாதபடியே,
சொல்லியும் சொல்லாமலும் எண்ணியதெவையோ
சொற்கள் எண்ணத்தில்
பிண்ணியபடியோ,
வெகுவாய் சொன்னால் வெறுத்துதான்விடுமா
விட்டுச்சொன்னால்
விலகி விடுமா
சொல்லுவதும் சொல்லாததும்
சொல்லுமா சொர்கக்த்தை,
எண்ணங்களை
எளிதாய் தெரிய
சுண்ணம் வைத்து
எழுதாதீர்
மனக்கணக்கு பறக்கடித்தும்
எம்
மனக்கண்ணில் காணாதோ,
சொல்லும் தளர்ந்து
எண்ணம் இழைத்தும்
மனம் காணும்
திரைமொழி
மனம்காணும் மருவாதே,
சொல்லியல்கள்
தேவையில்லை
எனக்கறிந்தும்
நின்றறிய - உமக்குவினவும்
என்னென்ன
என்றறிய!