எழுதுகோலும் எரியும்
உரிமையை உரக்க
கேட்டிடச் சொல்லும்
எழுதுகோலும் ஒர்
ஆயுதம் தானே
உண்மையை மட்டுமே
பேசிடச் சொல்லும்
எழுதுகோலும் இங்கு
ஆசான் தானே
அடிமை வாழ்க்கையில்
சோர்ந்து கிடந்தோரை
சுதந்திர வேட்கைக்கு
உந்தியது எழுதுகோல்
எதற்கும் பேசாமல்
ஏமாந்து கிடந்தோரை
வீர உணவிட்டு
மாற்றியது எழுதுகோல்
எழுதுகோலும் எரியும்
அதன் பொருட்டு வெளிப்படும் ஒளியில்
மனிதனை நொறுக்கும்
அத்தனைக் காரணியும்
பயந்து நடுங்கியே நெளியும்
அதன் பின்னோ
புத்தியுள்ள பூமி மனிதருக்கும்
புத்தி தெளியும்
இந்த மருந்தாலே மறைந்தே போய்விடும்
வாட்டி வதைத்துவந்த வலியும்