கானகமே என் தாயகம்

சாமுராய் திரைப்படத்தின்
"மூங்கில் காடுகளே" என்ற
பாடலின் ராகத்திற்கு
நான் எழுதிய வரிகள்


பசுமைக்கானகமே...
எந்தன் தரணியின் வானகமே...
தூயநதிகளுமே...விரும்பும் அழகுப்பொழில் வனமே...

மரங்கள் யாவுமே பூக்களை உதிர்க்க...
கனிகள் யாவுமே தேனினும் இனிக்க...
பறவைகள் மதிமயக்கத்தில்
திழைக்க...
முயலுதென் மனம் பறவையாய்
பறக்க...பறக்க...பறக்க...பறக்க


வாழ்வின் பயணத்தில்
உள்ளம் களைத்து போகையிலே...
நதியின் ஓட்டத்தில்...
புதுஉணர்வுகள் பெறுகிறதே...
காற்றின் வடிவத்தில்
பாமகள் விரல்கள் இசைக்கிறதோ?
கிளைகளின் அசைவுகளில்
இலைகளோ
வீணைகள் ஒலிக்கிறதே!!!

ஆதவனை நான்
கேட்டேனா?
இல்லை
வானவிலைத்தான்
கேட்டேனா?
நிலவினை தான் நான்
கேட்டேனா?
என் நிழலினை தான் நான்
கேட்டேனா?
விழிகள் மகிழும்
அமைதி வழியும்
உன்மடியினில்
யுகங்கள் வாழ்வேனா!!!!

பசுமைக்கானகமே....

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (18-Feb-18, 6:29 pm)
பார்வை : 167

மேலே