நண்பனுக்காக ஒரு கவிதை

நட்பின் அருமை சொல்லும் ஒரு விதை

என் நண்பனுக்காக ஒரு கவிதை

பொய்கள் இன்றி முதல் கவிதை

இதுவரை யாரும் சொன்னதில்லை

உன் கனவுகள் நண்பன் கருவறை

வெற்றியை அது தொடும்வரை

நண்பனின் யோசைனைகள் நிற்பதில்லை

தோல்வியில் தோள் சாய தோள்

கொடுப்பது நட்பல்ல உன் முயற்சியை

புதுவிதமாய் முயன்று பார் என்பான் நண்பன்

என் கனவினை அவன் சுமப்பான்

நெஞ்சத்தை கருவறை போல் வைப்பான்

அவனிலும் தாய்மை உண்டு

நான் சொல்வது உண்மை என்று

உணர்கையில் மனம் எங்கும்

நண்பனின் தோளில் மனம் தூங்கும்

நட்புக்கும் கற்பு உண்டு என்று

நட்பையும் நீ உணர்ந்தால்

நட்பு மேலும் புனிதம் கொள்ளும்

நாளை உலகை நட்பு வெல்லும்

மனத்தால் ரசித்து பார் நட்பும்

ஒரு கவிதை

அனுமதி நட்பில் தேவையில்லை

அதை வாங்கிட விலையுமில்லை

தனித்தகுதி எதுவும் இல்லை

யாரும் சொல்லி வருவதில்லை

சிறு புன்னகையில் தொடங்கும்

உன் சோர்வினில் பங்கெடுக்கும்

உறுதுணையாய் என்றும் நிற்கும்

உனகொன்று என்றால் நட்பின் உயிர் துடிக்கும்

நட்பின் நினைவுகளை சுமப்பதும்

ஒரு சுகம்தான்

உண்மை நட்பு மட்டும் கிடைப்பதும்

ஒரு வரம் தான்

என்னை பொறுத்தவரை நட்பை விட

சிறந்த உறவு இல்லை

எழுதியவர் : rudhran (5-Aug-11, 11:24 am)
பார்வை : 1522

மேலே