என்னப் பெத்த ஆத்தா

என்னப் பெத்தெடுத்த அம்மாவே!உம்முன்னாடி
கடவுளெல்லாம் சும்மாவே★
வட்டக் கல்லுல ராகிஅரச்சு,
என் வட்டியிலெ களி நெறச்சே★
கிட்டிப் புல்லு விளையாட்டில்
நெட்டித் தள்ளுன என் சகாவெ,தலையிலெ
கொட்டிடுவேநீ வலிக்காமெ●
முள்ளு குத்தி விறகொடிச்சு,
(யாராரோ)சொல்லு குத்தி
மனசொடஞ்சு,என் நெஞ்சு ஒடையாம பாத்திருப்பெ★
என் உடம்புல காயம்பட்டு
என்னுதிரம் வரும் முன்னே
உன் கண்ணுதிரம் கொட்டுமடி★
கண்ணேறு பட விட்டதில்லெ,
ஏங்கண்ணு கலங்கவும் விட்டதில்லெ●
சொல்லேறு பட விட்டதுமில்ல,என்ன ஒத்தச் சொல்லு திட்டியதும் இல்லெ●
உடம்புலெ பல நோயடிச்சு வலிச்சதுண்டு, என் தாயே
நீயடிச்சு ஒருநாளும் வலிச்சதில்லெ●
சுத்தும் முத்தும் பாத்துபுட்டு
உன் அழுக்கு சேலையிலெ
ஆகாரத்தை மறச்சுத் தருவெ,அதெனக்கு தேவாமிர்தமா இனிக்குமம்மா★
இந்த உயிர் கொடுத்த உனக்கு நீ போன பின்னே,
தலைமயிர் கொடுத்தா கடன்
தீந்திடுமா?
நீ இருக்கையிலே ஒரு நூல
கூட தரலியே நானும்,
போகும்போது பட்டு சேலைய போட்டாலும் சுமந்த கடன் நேராகிடுமா?
என்னெப் பெத்த தாயே,வயசான உன்னெப் பாக்காத நான் நன்றி கெட்ட
நாயேதானே,உன் காலு பட்ட
இடமெல்லாம் ஏங்கண்ணீரால தொழுதிடுவே(ன்)●இனி ஒத்த வாய்
சோத்துக்கு நாதியத்து செத்திடுவே(ன்)இந்த நாயே,மேல வந்து சேந்தாலும் என்னெத் தாலாட்ட காத்திருப்பே நீயே★
என் பாவம் செஞ்ச புண்ணியமென்ன
உம் மகனா நாம்பொறந்தேன்🙏
உன் புண்ணியம் செஞ்ச பாவமென்ன
என்னை மகனாப் பெத்தெடுத்தே

எழுதியவர் : பாலமுருகன்பாபு (19-Feb-18, 4:34 pm)
பார்வை : 746

மேலே