அன்பு

உன்னோடு இருக்கும் போது மட்டும்
வாழ்க்கை சுகமானது என்று நினைத்தேன்
உன்னை விட்டு பிரிந்த பிறகும் உன்
நினைவுகள் என்னை சுகமானதாக்குகின்றன

காலையில் தினமும் உன் வார்த்தைக்காக
காத்திருக்கின்றேன் அதுவே எனக்கு
முதல் வாசகமாக அமைகின்றது

இதயம் என்னவோ ஒன்று தான் ஆனால்
அதிலோ பல கேள்விகள்
புதைந்துள்ளன ஒரு கேள்விக்குக்கும் விடை
கிடைப்பதில்லை உயிரே

என் மனதின் வார்த்தைகளை கவிதைகளாக
எழுதுகின்றேன் அப்படியும்
என் நோட்டில் உள்ள பக்கங்கள் தான்
தீர்ந்து விடுகின்றன என் வார்த்தையின்
அர்த்தம் தெரியவில்லை

காத்திருந்து காத்திருந்து காலங்கள் தான்
கடக்கின்றன ஆனால் உன் அன்பு
மட்டும் எப்போதும் குறைவதில்லை

காயம் பட்ட வழியை கூட தாங்கி விடலாம்
ஆனால் உன் பிரிவை மட்டும்
தங்க முடியாது

அன்போடு பரிமாறிய உணவு என்
வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றதாகிவிட்ட்து

மரணம் வந்தாலும் கூட ஏற்று கொள்ளலாம்
ஆனால் நீ என்றும் என்னை விட்டு
சென்று விடாதே அன்பே

பட்டும் திருஇந்தவில்லை இந்த பாவிமனம்
என்றும் ஏங்குகின்றது உன்னை
எண்ணி ஒவ்வொரு நாளும்

ஏமாறத்தான் தெரிந்தது இந்த இதயத்திற்கு
என்றும் ஏமாத்த தெரியவில்லை இந்த இதயத்திற்கு

எழுதியவர் : kalaiselvi E (19-Feb-18, 7:25 pm)
Tanglish : anbu
பார்வை : 351

மேலே