என் இதயம்

என் உயிரின் மேல்
எனக்கு அலாதி பிரியம்
ஏனென்றால்,
உனக்கு மட்டுமே உரித்தான
ஒன்று என்னிடத்தில் உள்ளது
உனைச் சேர நொடிப் பொழுதும்
துடித்துக் கொண்டிருக்கிறது..
அதை உன்னிடம்
சேர்க்கும் நாள் வரை
என் உயிரை பத்திரமாக
பார்த்துக் கொள்ள வேண்டும்
உன்னிடம் சேர்த்த மறு நொடியில்
மரணம் வந்தாலும்
மனசார ஏற்றுக் கொள்வேன்..!

💓என் இதயம்💓

❤சேக் உதுமான் ❤

எழுதியவர் : சேக் உதுமான் (20-Feb-18, 8:24 pm)
Tanglish : en ithayam
பார்வை : 993

மேலே