கற்பு

இலக்கணம் தேடியே தாேற்று விட்டேன்
பெண் பெற்ற பேறென்றார்
இரு பாலருக்கும் பாெதுவென்றார்
கெடாதது, மாசற்றது, தூய்மை என்றார்
மகிழ்விலும், ஊடலிலும்
தலைவனும் தலைவியும்
இன்பம் காண்பதும் கற்பென்றார்
"கற்பு" பெண்மையின் பாேராட்டம்
தாய்மையின் பிறப்பிடம்
உயிர் சேர்ந்து உயிர் வாழும்
புனிதக் காேயில் என்பேன்
பந்த இனணப்பின்றி பறிக்கப்படுவதும் கற்பு
பந்த இணைப்பால் பரிமாறிக் காெள்வதும் கற்பு