முதுமொழிக் காஞ்சி 36

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பொய் வேளாண்மை புலைமையிற் றுவ்வாது. 6

- துவ்வாப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் பொய்பட்ட உபகாரம் புலைமையின் நீங்கி யொழியாது.

பதவுரை:

பொய் வேளாண்மை - விருப்பமில்லாவிட்டாலும் விருப்பமுடையவர்போல் செய்யும் ஈகையானது,

புலைமையின் - நீசத்தன்மையின், துவ்வாது - நீங்கி யொழியாது.

புலைமை - கீழோரது தன்மை - இழிவு.

மனப்பூர்வமாய்ச் செய்யாத உபகாரம் கீழோரது தன்மையின் வேறாகாது.

பிறரிடம் பெருமை பெற வேண்டி விருப்பமின்றி உபகாரம் செய்வோர் நீசர்க்குச் சமானமாவர்.

'புலையிற் றுவ்வாது' - பாடபேதம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Feb-18, 9:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

மேலே