காதல்
உன்னைப் பார்த்து பார்த்து
பரவசம் அடைகின்றேன் பெண்ணே
நாளெல்லாம் எனக்கு
நன்மை தரும் உந்தன்
பார்வைக்கு நான் அடிமை
பார்க்க பார்க்க இன்பம்
அள்ளி அள்ளி தரும்
உந்தன் அங்கங்கள் நளினங்கள்
மோகம் தந்து காமம் தந்து
காமத்தீ என்னுள் பரவி
பித்தனாய் ஆக்கிட, நல்ல
தருணத்தில் உந்தன்
அன்பு கரங்கள் எனைத்தழுவி
அணைத்து முத்தம் கொடுத்து
'மன்னவனே, நீ தான் என்
இதய வீணை, வந்து காதல்
கீதம் இசைத்திடுவாய்' என்று கூறி
காமத்தீ அதனை அடக்கி
காதல் கீதம் பாடி என்னை
அன்பிற்கு அடிமை ஆக்கினாள்
'உடலோடு உடல் தரும் உறவு
ஒன்று, உயிரோடு உயிர்க் கொள்ளும்
உறவே காதல் என்றாள், என்னவள்'
காதலை எனக்கு புரியவைத்தாள்,
அவள் பேரழகிதான் அவளை
பார்த்து பார்த்து பரவசமடைந்து நான்
இப்போது அவள் கண்களில் என்னை
ஆளும் அன்பு கண்டேன் பண்பு கண்டேன்
என்னுள் இருந்த காம மிருகம்
இனி எப்போதும் அவள் பார்வைக்கு
அடிமை அவள் அன்பிற்கு அடிமை
இதுவே அவள் என் காதிற்குள்
ஓதிய காதல் மந்திரம் ,
' எத்தனை அழகும் காலம் அழித்துவிடும்
உள்ளத்தில் ஒளிரும் நம் காதல் ஜோதி
அது என்றும் அணையா ஜோதி' என்றாள்
அவள்தான் என்னவள் என் அன்பு காதலி