பணம்

பணம் இருக்கும் இடத்தில
நல்ல மனம் இல்லை !
மனம் இருக்கும் இடத்தில
அதிக பணம் இல்லை !
பணமே குறிகோளாகச் செல்லும்
நல்ல மனங்கள்
இறுதியில் ...
அடைவது பணத்தை
இழப்பது குணத்தை ..!
அழகிருந்தும் ...
அறிவிருந்தும் ...
கற்பில் சிறந்திருந்தும்...
முதிர் கன்னிகள் பலரிங்கே
பணமில்லா காரணத்தால்..!

நேர் கொண்ட பார்வையில்லை
நிமிர்ந்த நன்னடையில்லை
வாழ்வியல் ஒழுக்கமில்லை
என்றாலும்....
பேர் புகழ் உச்சாணியில் பலபேர்
பணமிருக்கும் காரணத்தால்..!

அசாத்தியத்தை சாத்தியமாக்கும் பணம்...
சத்தியத்தை நடு சந்தியில் நிற்க வைக்கும் பணம்

ஆனாலும்....

பணமிருக்கு ...
அதற்க்கு நான் அடிமையில்லை
புகழிருக்கு...
மதிமயக்கம் எனக்கில்லை
என்போர் சிலர் கருணையில்தான்
இன்னும் வாழ்ந்திருக்கு கலியுகமிங்கே..!

எழுதியவர் : R. ஜெபராஜ் (5-Aug-11, 11:00 pm)
பார்வை : 519

மேலே