சிதறும் சிரியா 

உலக நாடுகளே
உறங்கிவிட்டிர்களா
இல்லை
உமையாகிவிட்டிர்களா ஒதுங்கிவிட்டிர்களா
இல்லை
ஓடிவிட்டிர்களா
சிரியா என்னும் நாடே
தீவிரவாதப்போரால் சிதைந்துக்கொண்டிருக்கிறது

அங்குள்ள
குழைந்தைகள் இளைஞர்கள் முதியவர்கள் பெண்கள் என அனைவரது ரத்தமும் மொத்தமாய்
சிதறிப்போய் நதிநீராய் ஓடிக்கொண்டிருக்கிறது

அவர்களின் உயிர்கள் எல்லாம்
காற்றில் விழும் வாழைமரமாய்
அனைத்திடத்திலும் சாய்ந்துக்கொண்டிருக்கிறது

இதையெல்லாம்
தடுக்காமலும்
தட்டிக்கேட்காமலும்
ஐநா சபையும்
உலகநாடுகளும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறது

பிறகு எப்படி
இம்மண்ணில் மனிதம் வாழும்
இந்நிலை இப்படியே தொடர்ந்தாள்
மிக விரைவில்
ஒட்டுமொத்த மனித இனமும் உருக்குலைந்து சாகும்

அதற்க்கு முன்
உலக நாடே ஒன்றுக்கூடு
மனிதம் அழிக்கும் தீவிரவாதத்தை
தடம் தெரியாமல் அழித்துப்போடு
பிறகு பார் அமைதிக்காணும்
நம் உலக நாடு !

எழுதியவர் : சூரியன்வேதா (26-Feb-18, 1:58 am)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 172

மேலே