வழி பிறக்கும்
=============
பேருக்குச் சீட்டெடுக்கும் பச்சைக்கிளி உன்னைப்
=பெரிதாக நம்பியவன் சீட்டைக் கிழி
ஊருக்குள் தொழில்செய்ய ஆயிரம்வழி இந்த
=உதவாதக் கரைக்குத்தான் கூண்டுக் கிளி
யாருக்குக் காண்பித்தாய் நீயோர்வழி? இங்கே
=யாசித்துப் பிழைக்கத்தான் கண்டாய் வழி
நேருக்கு நேர்நின்றிதை நீயும்மொழி அந்த
=நிமிசத்தில் பிறந்துவிடும் உனக்கும் வழி.
*மெய்யன் நடராஜ்