திண்டிவனம்

திண்டிவனம்
------------------------

வணக்கம் திண்டிவனம் 💙🙏

இந்த ஊர இலக்கியங்கள்ல
திண்டிச்சரம் என்று குறிப்பிடுறாங்க.
ஆனா அதுக்கு முன்னாடியே
இந்த ஊரு புளியங்காடுங்க.
இங்கே நிறைய புளியமரங்க இருக்கு...
சாலையின் இருபுறமும் அணைச்சிக்கிட்டு அழகா இருக்கும் பாக்கவே.

புளியங்காடு என்பது தாங்க திந்திருணிவனமா ஆகி திந்திரிவனமா மாறி இன்னைக்கு திண்டிவனமா திரிஞ்சிடுத்து.

இங்கே நாடகக் கலை என்னைக்கும் வாழ்ந்துகிட்டு இருக்கும் மக்கா....

சிறுபாணாற்றுப்படை இந்த மண்ணு தான்...

இந்த நாடு பேரு ஓய்மானாடு.
ஓய்மான் (ஓவியம் வரையறவங்க).

இந்த நாடுக்கும் இலங்கைக்கும்
நெருங்குன சொந்தங்க.

இந்த நாட்டு மன்னன்
நல்லியக்கோடன் இருக்காரே.
புடம் போட்ட தங்கங்க

கடையெழு வள்ளல்களோட மொத்த உருவம்...
சிறுபாணாற்றுப்படைல நம்ம நல்லூர் நத்தத்தனார்.
கடையெழு வள்ளலோட கொடைமடைத்தன்மையை சொல்லிட்டு
இவர் கொடைய கொண்டாடுறாருங்க(பாடுறாருங்க)....

இலங்கை சொன்னன்ல
இலங்கைல இருந்து வந்த தமிழ்க்குடி
தாய் தந்தை பெற்றெடுத்த முத்துப்பிள்ளைங்க நம்ம நாயகன்.

நம்ம நாயகன்
ஆண்ட பூமி நன்மாவிலங்கை...
இலங்கை தொன்மாவிலங்கை...

திண்டிவனத்துல மூனு இலங்கை இருக்குங்க...

மாவிலங்கை(நன்மாவிலங்கை)
மேல்மாவிலங்கை
கீழ்மாவிலங்கை

இந்த மண்ணு நிறைய அன்போட அள்ளி அள்ளி கொடுத்திருக்கிங்க...

என் தாய் மண்ணுக்கு கோடி அன்பு முத்தங்கள்😘😘😘😘😘😍😊

உன் மீது என்றைக்கும் தீராத அன்போடு உன் மகள்💙💞

~ திண்டிவனம் பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Feb-18, 11:36 am)
பார்வை : 52

மேலே