அகதி நெஞ்சம்

உறங்கி எழும் நேரம்
உயிர் இல்லை ஊனில்
உறவுகளின் கதறல்கள்
கேட்கவில்லை வானில்
வெடிகுண்டு புகை
கருமேகமாக சூழ்கிறது
வெளிச்சம் அணைந்த நேரம்
வெண்ணிலா அழுகிறது
ஈழத்தின் குருதியின் ஈரம்
இன்னும் காயாமல் இருக்கிறது
ஈவிரக்கத்தின் கூக்குரலின் சாரம்
இன்னும் சேராமல் இருக்கிறது
ஈன்ற நாட்டில் வாழ இயலாத கொடுமை
இன்னும் உலகில் இருக்கிறது
மரபணு விதைகள்
மண் வளம் அழிக்கிறது
மதமும் இனமும்
மனிதம் அழிக்கிறது
பிற உயிர்கள் பறித்து
பிரிவினை செய் என்று
எம்மதமும் உரைத்ததில்லை
பிஞ்சு மழலைகளை
துடிக்க கொள்பவன்
நிலைத்து வாழ்ந்ததில்லை
அடுத்தவர் சண்டையில்
குளிர் காயும் அந்நிய தேசம்
அல்ல நாங்கள்
அந்நிய நாட்டிற்காகவும்
கண்ணீர் மழை துளி
சிந்துபவர்கள் நாங்கள்