அன்புள்ள மான் விழியே

அன்புள்ள மான் விழியே //
அன்பை அள்ளி தந்த இந்திரலோகத்தின் நாயகியே //
அழகில் குறையாத சந்திர வதனம் கொண்ட எந்தையே
என்மனதில் காதல் விதை போட்டு //
பூக்களாய் காதல் வாசம் வீசி //
என் அருகில் வந்து
உன் வாச பூக்களில் நேசம் கொள்ள வைத்து//
என் மனதை சுடர்மிகு சுவையாக
பாட வைக்கிறாய்
நீ என்ன காதலில் விளைந்த
கனி அமுதோ//
அல்லது காதலால்
உலகில் ஏற்றம் புரியவந்த
தேவதையோ