புதுமையாய் அவள்
விடுமுறை நாளில்
வெயில் கொளுத்தி சாயும் வேளையிலே...
ஆள் நடமாட்டமில்லா
அவளது வீட்டு
அறையின் கிட்டத்தில்...
எட்டிப்பார்க்க மெல்ல தெரிந்த
கவிமகளின் பிம்பத்தை...
கூப்பிடலாமா? வேண்டாமா?
என்று தீர்மானமற்று நின்ற அந்நொடியில்...
அள்ளிக்கட்டிய கொண்டையும்
அதன் அடிப்பகுதியில் அமைந்து படிந்த தோள்களின் மேல் அமைந்த
கழுத்தினிலே...
குறுகுறுத்த எனது
கூரிய பார்வை குவிந்த
ஸ்பரிசத்தில்...
எதிர் பாராது இடர் கொண்ட வேளையில்...
என்னை நான் சுதாரித்துக் கொள்ளும் முன்
திரும்பிய அவளுடன் பேச எண்ணுகையில்...
மௌன மொழி கொண்டு நின்றேன்...
சுடிதாரில் சிறுபிள்ளையாய் கண்ட அவளை...
சேலையணிந்த சிற்பமாய் கண்ட போது.....