அகால பகல்

தீயுள் தீ விளைந்த
கனவொன்றை அறியாது
அதிகாலை முளைத்த
வெளிச்சத்தின் பிசுபிசுப்பு
போர்வையில் படர்ந்தது
துயில் முகர்ந்த
விழி பிரிக்க
அக்கனவின் முடிவு தெரியா
நினைவுகள்...
முடிவுற்று போயினும்
ஈர்த்தது அந்நாள் முழுக்க...

எழுதியவர் : ஸ்பரிசன் (28-Feb-18, 11:07 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : agaala pagal
பார்வை : 130

மேலே