ஜாடியுள் ஓடும் வேங்கை
மனம் தின்னும் மிருகம்
கால்சுற்றி கிடந்தது
நகர விடாமல்...
எவரின் அழைப்பும்
அசைக்கவில்லை அதனை.
அழைத்த மொழிகளை
ஈசல்கள் விழுங்கின...
பகலை கெளவிய இரவு
நகரம் ஊர்ந்தது.
வால் அசைத்த மிருகம்
இருட்டின் கரிப்பை
உறிஞ்சி குடித்தது நீராய்.
திசைகளின் ஓரத்தில்
நெளிந்து நெளிந்து
இழுத்துச் செல்ல
ஓங்கிச் சொல்லும்
உன் கவிதைக்குள்
புகுந்தேன்...
திருகும் மரணத்தை
திருகியவண்ணம்.