தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி16
" இப்போது உங்கள் முன் நம் மாண்புமிகு பிரதமர் உரையாற்றுவார். ",என்று கூற, பிரதமர் தனது உரையைப் படிப்பதற்காக மைக்கியின் முன் வந்து நின்றார்.
பிரதமருக்கு அருகில் அசோக் நின்றிருந்தான்.
சிவா சற்று தொலைவில் கூட்டத்திற்குள் மக்களோடு மக்களாக நின்றிருந்தான்.
தனது உரையை பிரதமர், " என் இரத்தத்தின் இரத்தங்களே! கோடான கோடி தமிழ் நெஞ்சங்களே!
உங்களைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
கடலைகளா, மனித தலைகளா?
என் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக உணர்கிறேன்.
தேர்தலுக்காகத் திட்டமிட்டு திட்டங்களைத் தீட்டி உங்களை ஏமாற்ற நான் இங்கு வரவில்லை.
பாரத நாட்டில் பாவிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
நம் கூடவே இருந்து நமக்கே குழி பறிக்கும கூட்டங்கள் அதிகமாகி விட்டன.
அவற்றை இனம் கண்டறிந்து களையெடுக்க வேண்டும்.
அதற்கு தனிஒருவனாக என்னால் எதுவும் செய்ய முடியாது. உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ",என்று பிரதமர் பேசிக் கொண்டிருக்கையில் அக்கூட்டத்தில் சற்று பதற்றமாக இருந்தான் ராகவன்.
பிரதமர் தன் உரையை முடித்தவுடன் மேடையில் மக்கள் வரிசையாக வரவழைக்கப்பட்டனர்.
வரிசையில் வருவோரிடம் குறைகளைக் கேட்டு வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டே இருக்க, ராகவன் பிரதமரை நெருங்கினான்.
பிரதமரின் காலில் விழக் குனிந்தவன் தனது உடலில் மறைத்து வைத்திருந்து வெடிமருந்தை வெடிக்கச் செய்யும் பொத்தானை அழுத்தினான்.
ஆனால், வெடிமருந்து வெடிக்கவில்லை.
அதற்கான காரணம் தெரியாமல் விழித்த ராகவன் எழுந்தான்.
எழுந்தவனைப் பார்த்து பிரதமர், " ஏன்பா ராகவா? என்னைக் கொல்ல வேண்டும் என்பதற்காக உன் உயிரையும் கொடுக்கத் துணிந்துவிட்டாயே! அப்படி என் மேல உனக்கு என்னப்பா கோபம்? ",என்றார்.
ராகவன் பதில் பேச நாவெழாமல் நிற்க, ராகவன் பின்னாலிருந்து வந்த சிவா, " என்ன ராகவன்? நீ பொத்தானை அழுத்தியும் ஏன் வெடிக்கவில்லை என்று குழப்பமாக இருக்கா? ",என்றான்.
அதற்கு, அசோக் , " என்ன சார்? உங்களோடு சேர்த்து இங்க இருப்பவர்கள் கொல்ல வந்தவனைக் கொல்லாமல் கொஞ்சிக் கொண்டு இருக்கீங்க?. ",என்றுக் கூறிக் கொண்டே தனது துப்பாக்கியை ராகவனை நோக்கி நீட்டினான்.
தடுத்த பிரதமர், " அவனது பிரச்சனை என்னவென்று விசாரிக்க வேண்டும்.
அவன் உயிர் வாழ வேண்டும். எனக்காக எந்த உயிரும் உடலை விட்டுப் பிரியக்கூடாது. ",என்று கூற, " இவன் உங்களைக் கொல்ல வந்த கொடியவன். கருணை காட்டப்பட வேண்டியவன் அல்ல. ",என்றான் அசோக்.
" ஏன்பா அசோக்? என் உயிர் பெரிது? இவன் உயிர் மட்டும் சிறிதா?
ஆயுதம் ஏந்தி அழிக்க நினைப்பவர் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களுடைய உண்மை நிலையைக் கட்டாயம் நாம் அறிந்து பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுக் காண வேண்டும். மனதின் போர் (The War of Mind) என்ற சிறப்பான புத்தகத்தை எழுதிய ஆசிரியராகிய உனக்கு நான் இதற்கு மேலும் விளக்கம் தர வேண்டியது இல்லையென்று நினைக்கிறேன். ",என்றார்.
அசோக் அமைதியாக இருந்தான்.
சிவா ராகவனை அழைத்துக் கொண்டு சென்று உடலில் இருந்த வெடிமருந்தைக் கழட்டி எடுத்தான்.
பிரதமர் மக்கள் குறைகளைக் கேட்டறிந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அன்றைய நிகழ்வு குறித்து ஊடகங்களில் சரமாரியாக விமர்சனங்கள் அலசப்பட்டன.
அவற்றில் சிலவற்றைக் காணலாம்.
" என்னங்க சொல்கிறீங்க? வெடிமருந்தை உடலில் மறைத்துக் கட்டிக் கொண்டு வந்தவன் அவன் தான் என்று எப்படி தெரிந்தது? "
" உண்மையில் வெடிமருந்தைக் கட்டிக்கொண்டு வந்திருந்தால் பொத்தானை அழுத்திய போது அது ஏன் வெடிக்கவில்லை? "
" எல்லாவற்றையும் பார்க்கும் அவர்களுடைய ஆளையே தீவிரவாதியாக வேசமிட்டு வரவழைத்து தமிழ்நாட்டு மக்களிடையே நல்ல பெயர் எடுப்பதற்காகப் பிரதமர் அரங்கேற்ற நாடகமே இது! "
இப்படியே காரசாரமாக பிரதமரைக் குற்றவாளியாக்கும் விமர்ச்சனங்களை தமிழ்நாட்டு ஊடகங்கள் முன்வைத்தனர்.
மறுநாள் காலை இந்திய இராணுவத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்று வெளிப்பட்டது.
அதில், " மாண்புமிகு பிரதமர் இராஜேந்திரன் அவர்களைக் கொலை செய்ய நிகழ்ந்த முயற்சி உண்மை தான்.
அதில் இருந்து பிரதமர் எப்படி உயிர் தப்பினார்?
வெடிமருந்து ஏன் வெடிக்கவில்லை? என்பதே மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதை தெளிவுபடுத்தவே இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்.
இந்திய இராணுவத்தைத் சேர்ந்த இன்சினீயர்கள் ஒரு கருவியைக் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள்.
அந்த கருவி ஒரு குறிப்பிட்ட ஏரியாக்குள் செயல்படும் எலக்ட்ரானிக் கருவிகளைக் கண்டுபிடித்துவிடும் திறன் கொண்டது.
இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் சாதாரணமான எலக்ட்ரானிக் கருவிகள் பச்சை நிறப் புள்ளிகளாலும்,
அழிவை ஏற்படுத்தும் வெடிமருந்து இணைக்கப்பட்ட கருவிகள் சிவப்பு நிறப்புள்ளிகளாலும் குறிக்கப்படும்.
அதோடு சிவப்பு நிறப் புள்ளியைத் தெரிந்தேடுத்து அதைச் செயல் இழக்கச் செய்யும் வசதியும் இந்தக் கருவியில் இருக்கிறது.
இந்தப் பெருமை எல்லாம் நமது இராணுவ இன்ஜினீயர்களையே சாரும்.
அழிவு சக்திகளை முறியடுக்கும் பயணத்தில் முதல் அடி இது. ",என்று இருந்தது.
இதற்கு விமர்சனம் செய்யாமல் இருப்பாங்களா?
தமிழர்களாயிற்றே!
" இந்த அறிக்கையே போலி. "
" இந்திய இராணுவமும் பிரதமரோடு சேர்ந்து கண்ணாமூச்சி ஆடுகிறது. "
" தமிழர்களை யாரும் ஏமாற்றமுடியாது. "
இப்படி பல எதிர்மறை விமர்சனங்களை ஊடகங்களில் அரசியல் நோக்கிலும், கயமை மனதாலும் பலர் முன் வைத்தனர்.
ராகவன் காவல்துறையினர் விசாரணையை எந்த விசயத்தையும் துப்பவில்லை.
வாயைக் கூட திறக்கவில்லை.
என்ன செய்வதென்று காவல்துறையே விழி பிதுங்கிக் கொண்டிருக்கையில் ஜெகன் ராகவனிடமிருந்து உண்மையை வாங்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார்.
ராகவனைக் கைதியைப் போல் நடத்தாமல் சாதாரணமாக சகஜமாகப் பழகும் நண்பரைப் போல் அழைத்துவந்தார் தன் இல்லத்திற்கு.
அங்கு தன் குடும்பத்தோடு உணவு உண்ண வைத்தார்.
ராகவனைப் பற்றி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவன் யார்? எங்க வாழ்ந்தான்? எப்படி தீவிரவாதியாக மாறினான்?
தொடரும்...