வா என் ஜீவனே
வாடலா?!
என் ஜீவனே!
வாசல் வா
என் ஜுவனே!!
உன் நெஞசிலே ஓர் பொய் பிம்பம்!
நிழலாடவே என் நிஜம் மங்கும்!!
வாடலா?!
என் ஜீவனே!!
வாசல் வா
என் ஜீவனே!!
காட்சிகள் நிஜம் என்று
கண்கள் சொல்லும்
அதுதான் கசப்பின் ஆரம்பம்!!
மனக்காட்சி உனை இங்கு
ஏமாற்றும் வேளை....
மனசாட்சி பதில் கூற
இயலாத ஊமை...
பூஞ்சோலை இங்கே
பூங்காற்றும் எங்கே?
பூவோடு புணராத
பூந்தென்றல் நான் இங்கே!!
வாடலா?!
என் ஜீவனே!
வாசல் வா
என் ஜீவனே!!
மனங்கள் இரண்டு
இணையும் பொழுது
மணலின் திரைகள் மறிக்காது!!
நிழலோடு போர் செய்ய
எய்கின்றாய் அம்பு!
நிலத்தைத்தான் அது கொல்லும்
நீ கொஞ்சம் நம்பு!!
சந்தேகம் இங்கே
சந்தோஷம் எங்கே?
வலிகாணா ஒருகாதல்
வாழாது வா இங்கே!!
வாடலா?!
என் ஜீவனே!
வாசல் வா
என் ஜீவனே!!