இப்படிக்கு மரம்

பட்ட மரம் பேசுகிறது - மனிதர்கலே
இந்த உலகில் நீங்கள் வாழ
தூய்மையன காற்றை கொடுத்தேன்
உங்களுக்கு உணவை கொடுத்தேன்
மழையாய் நீரை கொடுத்தேன் - பதிலுக்கு
நீங்கள் என் சந்ததிகளான விதைகள்
வளராமல் இருக்க
இந்த புவியை பிளாஸ்டிக் குப்பையாய்
நிறைத்தீர்கள் - இந்த உலகத்தின்
மறுமுனை வரை துளையிட்டு நீரை
உறுஞ்சினீர்கள் - இனியாவது
இந்த புவியில் நீங்கள் வாழ்ந்ததற்கு
அடையாளமாக எதையாவது விட்டுவிட்டு
செல்ல நினைத்தால் - என்னை
நட்டு விட்டு செல்லுங்கள் - இப்படிக்கு மரம்