எங்கே இருக்கிறார் கடவுள்

எல்லாரும் வரிசையில் நின்றார்கள்.
ஏனென்றேன்?

முருகனைத் தரிசிக்க என்றார்கள்.
முருகன் யாரென்றேன்?

முத்தமிழ் கடவுள் என்றார்கள்.
ஓகோ! முத்தமிழ் கடவுள் இக்கல் கோயிலில் சிறைத்து இருக்கிறீர்களோ என்றேன்?

ஹேய்! நாத்திகனே! எங்கள் கடவுளை பரிகாசிக்காதே என்றார்கள்.
ஹாஹா! கடவுளை நீங்கள் காத்திருந்து தரிசித்து வாருங்கள்,
நான் கடலில் குளித்துவிட்டு வருகிறேன் என்றேன்...

இவனுக்கு மூளை குழம்பிவிட்டது என்று எல்லோரும் செல்ல,
கடலலையில் நீந்தி மகிழ்ந்தேன்.
அலைகளின் தீண்டல்களில் முருகன் அருளைப் பெற்றேன்.
கற்காமலே முத்தமிழும் எனில் உதயமாகக் கண்டேன்...

ஓம் முருகா...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Mar-18, 7:03 pm)
பார்வை : 1622

மேலே