க+ர+தி+அ×தமிழம்=பசி
ஓட்டுப் போடுவோம்.
கமலுக்கு நீங்கள்
ரஜினிக்கு நான்
திமுக,அதிமுக..
அவர்கள் போடுவர்
கம்யூனிஸ்ட்க்கும்
போடவேண்டும்.
விசிக வையும்
விடவேண்டாம்.
மதிமுகவுக்கு இவர்கள்.
தேமுதிகவுக்கும் பலர்.
ஓட்டுக்கள் தானே...
பலம் கொண்ட
காங்கிரஸ்,பிஜேபி
அவர்களுக்கும் கூட!
மன்னிக்கவும்...
சுத்தத்தமிழ் தீர வீர
அமைப்புக்களை
மறந்து போனதற்கு...
போட்டு விடுங்கள் பாஸ்...
நோட்டாவா.... பாவம்
சவ(லை)ப்பிள்ளை அது...
வருபவர் ஆளட்டும்.
அவர்கள் வேலை அது
நன்றாக செய்வார்கள்...
எப்படியும் நாம்தான்
கண்டுபிடிக்கவேண்டும்
ஜனநாயகம் எனின் என்ன?
எந்தப்பொந்தினுள் அது பதுங்கியது என்பதை...
முடியும் நண்பரே...
என் பாட்டியின்
மண்டைக்கூடு நூலகத்தில்
அந்தப் புத்தகங்கள்
ஏராளம் இருக்கிறது.
புழுக்களை எடுத்துவிட்டால்
படித்துப்படித்து
பிடித்துவிடமாட்டோமா என்ன?