மொபைல் நம்பர் 950021
வருக நண்ப
என் வாட்ஸப்பில்...
உனது மெயில்கள்
விளங்கவில்லை.
சிலசமயம் அதில்
விடாது வளரும்
குற்றுயிரும் வலியும்...
வௌவ்வால்கள்
திரைப்படம் காண்பதை
போன்று இருந்தது.
உன் சொற்களுக்கும்
மௌனத்திற்கும்
இடையில் ஒவ்வாத
கசப்பு நதிக்கிறது...
துயருற்ற நேரத்தில்
உன் புன்னகை
மெயில் தகவல்
கொடும் இளிப்புகள்.
நேரங்கெட்ட நேரத்தில்
வந்து தொலைக்கும்
அவை கவிதையை
கடிக்கின்றன.
தட்டச்சுப்பொறிகளில்
எழுத்தை உறிக்கின்றன.
போதும் மெயில்கள்.
எழுதி எழுதி பேசுவோம்.
மனம் நொண்டாது நண்ப...