நிலவே நீ எங்கே

வீதியெங்கும் உலா சென்றேன்
நிலவே உன்னை கண்டுபிடித்திட
மேகங்களின் நடுவே ஒளிந்து அறியாமல்
வீட்டுக் கூரைகளில் தேடினேன்
ஒவ்வொரு மொட்டை மாடிகளில் ஏறி பார்த்தேன்.
நீ இல்லை
உன்னை காண்பதே எனது லட்சியமானது.
மூலை இடுக்குகளிலும் தேடினேன்.
காடுகளில் பதுங்கிவிட்டாயோ?
இருளிலும் உன்னை தேடினேன்.
உனது மெல்லிய வெளிச்சம் மட்டும் வருகிறது.நான் இருளில் தத்தளிக்க கூடாதென்று.உன்னை தேடி
மலை உச்சிக்கே சென்று விட்டேன்.
உனைக்காணவில்லை.
மூச்சடைக்க கோபத்தில் எழுந்தேன்.
நிலவே நீ எங்கேயென்று கத்தினேன்.
மேகத்திறைசீலையை நீக்கி மெல்ல முகம் காட்டினாய்..
போதும் இது போதுமென்று சரிந்தே கீழே விழுந்தேன். உன்னை பார்த்த நொடியில்

எழுதியவர் : பிரகதி (5-Mar-18, 9:09 am)
Tanglish : nilave nee engae
பார்வை : 55

மேலே