இப்போது இருப்பார்களா

காவிரி ஆறு ஓடி வந்து
காத்த காலமது
இரயில்வேயில் பணிபுரிந்த
இணையற்ற இரு நண்பர்கள்

பாஸ்கர் மூத்த அதிகாரி
பணி ஓய்வு பெற்றவர்,
இராகவன் அதிகாரியாக
இன்னும் தொடர்கிறார்

பாஸ்கர் மூத்த அதிகாரியாக
பணியாற்றிய போது—இராகவனுக்கு
வழிகாட்டி, வாழ்வளித்து
உயர்வடையச் செய்தவர்

இன்றைய பதவி, பெருமை
அனைத்தும் அவரால் பெற்றதை
நினைக்க தவறாதவர்—இராகவன்
நன்றி மறக்காதவர்

தனது மூத்த அதிகாரி பாஸ்கர்
திறமை, நேர்மையில் சிறந்தவர்—இன்று
அவர் வறுமையில் வாடுவதை
அறிந்து அவரைக் காண சென்றார்

பணம் கொடுத்தால்
பெற்றுக்கொள்ள மறுப்பாரென
பொருட்களோடு, துணிமணிகள் ஏராளம்
கொண்டு சென்றார்

பாஸ்கரை பார்த்தார், பேசினார்
பின்பு பணிவோடு வேண்டினார்,
பொருட்களை மறுக்காமல் ஏற்கக்
கையெடுத்து கும்பிட்டார்

காத்து, கரையேற்றி விட்டவரை
காலம் பூரா நண்பர் மறப்பாரா?
இதுபோல நண்பர்கள்
இப்போது இருப்பார்களா?

எழுதியவர் : கோ. கணபதி. (5-Mar-18, 2:43 pm)
பார்வை : 136

மேலே