இயற்கை அன்னை
இயற்கை அன்னையே
பாவம் நீ
உனக்கேது உறக்கம்
உலகின் உயிர்களெல்லாம்
உன் மடியில்
ஆடிப் பாடி உறங்கி
பின் மீண்டும் எழுந்து.............
இப்படியே வாழ்ந்திட
அவற்றின் பராமரிப்பில்
அல்லும் பகலும்
அன்னையே நீ
பாவம் நீ அன்னையே
உனக்கேது உறக்கம்
நீ உறங்கிவிட்டால்
உலகம் மீளா உறக்கத்தில்
இதை அறிந்தானோ
நீ உறங்காது இருக்கின்றாய்
எம்மைக்காத்து எங்கள்
அன்னையே , இயற்கையே