பெண்

பெண்ணே

குலம் காக்க வந்த
தேவதை நீ
ஒரு போதும் குலைந்து போகாதே...

சாதிக்கப் பிறந்தவள் நீ
ஒரு போதும் சலித்து போகாதே...

மலரப் பிறந்தவள் நீ
ஒரு போதும் உதிர்ந்து போகாதே...

ஒளிரப் பிறந்தவள் நீ
ஒரு போதும் ஒளிந்து கொள்ளாதே...

ஆக்கப் பிறந்தவள் நீ
ஒரு போதும் அச்சம் கொள்ளாதே...

துக்கம் வந்தபோதும்
துவண்டுவிடாதே...

எதிரிகள் முளைத்த போதும்
எரிந்துவிடாதே...

உன்னை கசக்கி எறிந்தாலும்
கதிராய் முளைத்து வா!

உன்னை அணை கட்டித் தடுத்தாலும்
வெள்ளமாய் பெருகி வா!

நான் ஒரு
பெண்தானே என்று எண்ணாதே!

நான் ஒரு
பெண் என்று
கர்வம்கொள்!

மகளிர் தின
நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : கலா பாரதி (8-Mar-18, 10:37 am)
சேர்த்தது : கலா பாரதி
Tanglish : pen
பார்வை : 1816

மேலே