இயற்கையின் கோபம்
எங்களை தெய்வமாக வழிபட்டனர் உங்கள் முன்னோர்கள் !
வளைந்து, நெளிந்து,செல்லும் பாதையெல்லாம்
வழிவிட்டு வாழவைத்தனர்!
விதைகளை விதைத்து,விடியலில் உயிர் துளிர்த்த
எங்களை விழிமலர கண்டு மகிழ்ந்தனர்!
கன்றாக நட்டு களையெடுத்து பேணி பாதுக்காத்தனர் !
சாணம் முதல் சத்தான கழிவுகளை உரமாக இட்டு
வளமான வாழ்வு அளித்தனர் !
செடி,கொடி ,மரங்களாகி,தானியங்களையும்,மகத்தான
காய்கறிகளையும் தந்து மகிழ்ந்தோம் ! நீங்கள் !
சொகுசான வாழ்விற்காக எங்களை வெட்டியும்,
எங்கள் பாதைகளை அடைத்தும் இன்னல் புரிந்தீர்!
மகசூலிற்காக உரமென்று,பூச்சி கொல்லி மருந்தென்று
எதோ ஒன்றை தெளித்தீர்கள் எங்கள் மீது!
பொறுமையுடன் அள்ளி, அள்ளி தந்தோம் ! ஆனால்
பூமி தாய் சோர்ந்து விட்டால் மனிதா! மனிதா!
விழித்துக்கொள் !இதுவே உனக்கு எச்சரிக்கை மணி !
இல்லையெனில்,இல்லையெனில் உனது
குலத்திற்கு அடிக்கப்படும் சமாதிமணி !!!!!!!!!!!!!!!!