முடிவுரை
முடிவுரை
"""""""""""""""""
இங்கு விழாவாரியாக
எதுவும் சொல்லப்படவில்லை!
கூந்தல் மழை துளிகளாக
நம்பிக்கை
சிதறிக்கிடக்கிறது.
முகரமுன்னே
வாசனை உதிர்ந்து
துவண்டுகிடக்கிறது
பார்த்து சேர்த்து வைத்த
மிச்சசொச்ச ஆசைகளை
மௌனங்கள்
முமுங்கியிருந்தன
பழைய கணக்கு
தீர்க்கப்படவில்லை
என்ற கோணங்களும்
துல்லியமாக உள்ளது
வெள்ளாந்தி குறும்புத்தனம்
இடம்மாறி
குரூரம் பூசியிருந்தது
ஒரு துரதிஸ்டவசமான
பொழுதின் வக்கிரம்
குதறப்பட்டு சுவாசம்
காற்றுடன் கலந்து
சில நாழிகையாகியிருக்கலாம்!
.எழுதியவர்
லவன்