அடி கள்ளி

நீ
ஓர் தேன்துளிதான்-ஆனால்
என் மனம் முழுதையும்
ஆட்கொண்டாய்!

நீ
உன் நினைவுகளைத் தந்து
என் நினைவுகளைத்
தொலைக்கச் செய்தாய்.

நீ
புன்னகைக்கையில்
என்னுள்ளும் புன்னகை
நீ
அழுகையில்
என்னுள்ளும் அழுகை!

நீ ஒளி-ஆனால்
என்னை இருளில்
அமர்த்துகின்றாய்!

நீ
அவ்வப்பொழுது
கண்ணசைக்கின்றாய்
கையசைக்கின்றாய்
புன்னகைக்கின்றாய்-ஆதலால்
என்னுள்ளே
காதல் கிளர்ச்சி!

நான்,
நீயில்லையேல்
நானில்லை என்றபோது

நீ,
உன் கண்களில்
என்னுருவத்தை மறைத்தாய்
இதழ்களால்
வார்த்தைகளை தடுத்தாய்
இதயத்தின் அறைகளில்
என்னை வைத்து பூட்டினாய்.
ஆனால்
உன் கால் கொலுசு
சொன்னதடி நீ
அடியெடுத்து வைத்த
ஒவ்வொரு முறையும்
ஐ லவ் யூ
ஐ லவ் யூ என்று!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (12-Mar-18, 12:25 pm)
Tanglish : adi kalli
பார்வை : 254

மேலே