நினைவுகள் நிஜமாகுமா

உன்னுடன் பேசிய
பொழுதுகள் குறைவே தவிர
அதை நினைத்து நினைத்து
கற்பனைக் கனவில்
காலங்கழித்ததில்
குறையில்லை.......
உன் நினைவில்
முகம் மலர அது
உலகறிய காட்டிக்
கொடுக்கிறது.....
கண்ணீர் ஓடிய தடம்
மனதில் தழும்புகளாய் பதிய
இனிதாய் இருக்கும் உன்
நினைவுகள் மட்டும்.....
நினைவில் மட்டும் காலம்
ஓட்டுவது நித்தம்
நரக வாசம்....!
அதிலும் ஒரு சுகம்
நிழலாடும் உன் முகம்...!
புரியாத உன் மௌனம்
பேசக்கிடைக்காத பொழுதுகள்
என் வாழ்வின் மரணநொடிகள்.....
மரணம் கூட நொடியில்
வரும் போல ....!ஆனால்
நீயில்லாத நாட்களில்
நொடிக்கொரு முறை
சாவதால் மரணித்தல் கூட
புதிதல்ல எனக்கு...
முழுதாய் மடியும் முன்
மறந்து போயாவது
என் முன் வந்து விடு ..
விடை கொடுக்க....
நினைக்கும் போதெல்லாம்
உடனே வருகிறாய்..
உள்ளம் குளிர கனவில்..,
நிஜத்தில் கண்ணுக்குத்
தெரியாத தூரப்புள்ளியாய்..
என்னைப்போல் கனவில்
என்னுடன் பேசுகிறாயோ....
என் வானில் மட்டும்
விடியல் பகல் கனவாக...
என்றும் உன் நினைவில்
அழுது வற்றிய விழிகளுடன்...,
ஆனால் வற்றா உன்
நினைவுகளுடன் உன்
வரவுக்குக்காத்திருக்கும் நான்.....!

எழுதியவர் : sana (12-Mar-18, 12:39 pm)
பார்வை : 265

மேலே