நினைவுகள்
நீ தந்து சென்ற ரோஜா
வாடி விட்டதடி...
மிஞ்சி விட்ட முட்களெல்லாம்
என் இதயத்திலே கணக்குதடி..
நாம் சேர்ந்து இருந்த நாட்கள்
எல்லாம் ரணமாய் .
என்னை கொள்ளுதடி...
தனிமை மட்டுமே
என் உறவாகி போனதடி ..
உன் நினைவுகள்
வரும்போதெல்லாம்
என் கண்கள் மட்டுமே பேசுதடி ..
வார்த்தைகள் எல்லாம்
ஊமையாகி போனதடி ..
இனி ஒரு பிறவி எடுத்தாலும்
ஒரு தாய் வயிற்றிலே பிறப்போமடி...
அந்த பிறவியிலும் பிரிந்தாலும்
இனி ஒரு ஜென்மமே வேண்டாமடி ...
நீ தந்து சென்ற ரோஜா
வாடி விட்டதடி...
மிஞ்சி விட்ட முட்களெல்லாம்
என் இதயத்திலே கணக்குதடி..
தொட முடியாத தூரத்தில்
நீ இருக்கிறாய்
என்பதையும் மறந்தேனடி ...
உன் தோளில் சாய்ந்து
ஆறுதல் கேட்க தோணுதடி ...
என் இதயத்தில் பூத்த ரோஜா நீயடி...
உன்னை வாடாமல்
என் கண்ணீர் துளிகள்
நனைத்து கொண்டே இருக்கிறதடி...
என்றும் என் இமையில்
வைத்து பார்ப்பேனடி ..
விரைவில் என் விழிகளுக்கு
உயிர் கொடு என் தோழியே ..
உன் வருகைக்காக நானும்
காத்திருக்கிறேனடி
உன்னவளை காண
வந்து விடடி சீக்கிரமே ..
நீ தந்து சென்ற ரோஜா
வாடி விட்டதடி...
மிஞ்சி விட்ட முட்களெல்லாம்
என் இதயத்திலே கணக்குதடி..