குடியேற வருவாளா

குளமளவு ஆழமில்லை
குட்டை உயரம்தான்
குடைபிடித்துச் செல்கிறது
குற்றாளத்து அருவிதான்

குனிந்ததலை நிமிராத
குடும்பக் குத்துவிளக்கு
குலமகன் எதிரில்வருகிறேன்
குனிந்ததலையை கொஞ்சம்உயர்த்து

கும்பிடப் போனதெய்வம்
குறுக்கே வந்ததுபோல்
கும்பிட்டுச் சென்றேன்
குறுக்கே நீவந்தவிளைவால்

குறும்பால் என்னை
குடைந்து சென்றவளோ
குணம்பார்த்து என்னுள்
குடியேற வருவாளோ !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (13-Mar-18, 2:53 pm)
பார்வை : 76

மேலே