இயற்கையின் நியதியே மாறாது வென்றது
மதங்கள் மாறியது மார்க்கங்கள் மாறியது
சாதிகள் மாறியது சமநீதி மாறியது
பரிணாமம் மாறியது பரம்பரைகள் மாறியது
சாம்ராஜ்யம் மாறியது சரித்திரம் மாறியது
காலம் மாறியது காட்சிகள் மாறியது
கற்பனை மாறியது காப்பியங்கள் மாறியது
இயல்புகள் மாறியது இலக்கியம் மாறியது
இரசனைகள் மாறியது இசையியல் மாறியது
தேவைகள் மாறியது தேடல்கள் மாறியது
பாதைகள் மாறியது பயணங்கள் மாறியது
தொன்மை மாறியது தோற்றம் மாறியது
உண்மை மாறியது அண்மை மாறியது
விஞ்ஞானம் மாறியது வினைவீரியம் மாறியது
வரைமுறை மாறியது வாழும் முறை மாறியது
சித்தம் மாறியது சித்தாந்தம் மாறியது
கலை மாறியது கலாச்சாரம் மாறியது
இனம் மாறியது ஈட்டம் மாறியது
குணம் மாறியது கோட்டம் மாறியது
தனம் மாறியது தர்மமும் மாறியது
தகைமை மாறியது தகுதி மாறியது
ஏற்றங்கள் இறக்கங்கள் நிதர்சன உண்மையாகி
மாற்றம் ஒன்றே நிலையாகி நின்றது
பிறப்பும் இறப்பும் உதயமும் மறைவும்
இயற்கையின் நியதியாகி மாறாது வென்றது
கவிதாயினி அமுதா பொற்கொடி