கவிதை என்று ஒன்று

நீங்கள் இருக்கிறீர்களா?
என் இல்லத்தின்
வாசல்கள் மாறிவிட்டன
பார்த்து வாருங்கள்.
அறைகள் இப்போது
இடம் பெயர்ந்தன.
நான் இருந்த முன்னறை
பின் சென்றது...
சமையல்கட்டு
காணவே இல்லை.
நீங்கள் நடக்க வேண்டாம்
மிதந்தால் போதும்...
அவ்வளவுதான் நண்பரே...
வந்து விட்டீர்கள்.
இப்போது சொல்லுங்கள்
வரிகள் அற்ற கவிதையை...

எழுதியவர் : ஸ்பரிசன் (14-Mar-18, 11:32 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : kavithai enru ondru
பார்வை : 225

சிறந்த கவிதைகள்

மேலே