நெய்தல் நாடன் வாழ்த்துக் கவி
நெய்தல் நாட்டில்
கவிதை நெய்யால்
கபிலனின் கையால்
நெய்யப்பபட்டவன்
நெய்தல் நாடன்
நீ ஒரு காலைப்பொழுதில் காலையூர்
கண்டெடுத்த காளை
மாமழை பொழியும் வேளையில்
நீ வந்தால் பூமழை பொழிந்தது வானம்
அப்புகழைப் பெற்றுத்தந்ததோ உன் ஞானம்
ராதே
தன் தடந்தோள்களில் கருப்புத்துண்டு
தாங்கிநடக்கும் நெருப்புத்துண்டு
உன் நண்பன்
நீ அனைவரிடத்திலும்
அன்பைப் பொழியும் அன்பன்
பண்ணைப் பொழியும் கம்பன்
நீ காலாப்பட்டில்
பட்டைக் கிளப்பும் காலா
உன் குரல்தான்
எங்களுக்குத் திருக்குறள்
உன் விரல்கள் பாரதிவீட்டு உரல்
நீ புதுவைக்கு
புகழ் சேர்க்கப் பிறந்த
புது வைரம்
தமித்தாய் பெற்ற வரம்
உன் வீட்டுத் தாவரம்
பூக்களைப் பூக்காது
பாக்களை அல்லவா யாக்கிறது
மேடையில் உன் பா கள் பருகவே
ஈ கள் ஆகக் கூட்டம் வாக்கிறது
உன் பேனாவும்
பா னாவும்
வீணா எதையும் எழுதுவதில்லை
நீ அணியும் கருப்பு ஆடை
அதுதான் துரத்தியடித்தது
சமூகத்தைச் சீரழிக்கும் கருப்பு ஆடை
நீ தமிழ்ச்சான்றோர் பேரவையின்
தலைவன் பா கலைவன் மா கலைவன்
நானோ உன்னிடம் கட்டை விரல் இழக்காது
என் கட்டைக் குரல் இழக்க வந்த ஏகலைவன்
உன் பேனாவில் புது மையை
ஊற்றாமலேயே புதுமையை
எழுதியவன் நீ
நீ தமிழ் வளர்க்கும்
தமிழ்ச் சங்கம் மொழி வளர்க்கும்
தன்மானச் சிங்கம்
அனைவருக்கும்
நீ செய்வதோ நன்மை
உண்மையே பேசும்
உன் மெய்
உன் மெய் தான்
எங்களுக்கு உயிர் மெய்
உன் மேன்மை கண்டு
சிலிர்க்கின்றது என் மெய்
நீ கண்ணாடி அணிந்த கென்னடி
இளம் கவிகளின் முன்னோடி
உன் அகவை அறுபது அன்று
உன் நடை சொல்லும் இருபது என்று
புகழோடு வாழ்வாய் இவ்வுலகை வென்று