காட்சியும் கூறுதன்றோ
சிதறிய சிந்தையால்
சிந்திடும் தண்ணீரும்
சாய்ந்த குடங்களால்
நனைகின்ற ஆடையும்
கன்னியின் கவனத்தில்
கடுகளவும் கொள்ளாத
காரணமும் என்னவோ ...
வழிகின்ற காட்சியும்
விழிகளால் காணாத
எழிலவளின் எண்ணமும்
எத்திசையில் உள்ளதோ
கன்னியவளின் மனமும்
கடல்கடந்து சென்றதோ
சுந்தரியின் நெஞ்சமும்
சுந்தரனை நினைக்குதோ ...
போதையில் இருந்தாலும்
பாதையில் நடைபயணம்
கோதையின் நிலையிதை
கோடிட்டுக் காட்டினேன்
காதலிக்கும் இதயங்கள்
கனவிலே மிதப்பதுவும்
காலநேரம் இல்லையென
காட்சியும் கூறுதன்றோ !!!!!
பழனி குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
