போதும் இந்த ஒருதலைக் காமம்

தினம் தினம்
என் பார்வையில் அவள்
அவள் பார்வையில்
நான் வரவே இல்லை
காத்திருந்தேன் காத்திருந்தேன்
இன்னும் பயனில்லை
என் பார்வை அவள் மேல்
அவள் பார்வை என்மேல்
விழவே இல்லை
இந்த பலம் புளிக்கும்
அல்லது எட்டாத பழத்திற்கு
கொட்டாய் விடவேண்டாம்
என்று விட்டு விடவா
மனம் சொன்னது அவள்
உன்னவள் இல்லை என்று
இன்று அவள் பார்வையில் நான்
என் பார்வை அவள்மேல் விழவே இல்லை
நிழலாய்க் கூட
மனோதர்மம் இப்போது என்னுள் நிறைந்தது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Mar-18, 11:08 am)
பார்வை : 91

மேலே