மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய்

எனக்குப் பிடித்த பாடல்

மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய்

இன்று காலையில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன்; அந்தப் பெண்ணின் பெயர் மணிமேகலை. இணையரின் பொருத்தம் சிறப்பாக இருந்தது. உடனே என் மனதில் தோன்றியது;

“மாப்பிள்ளை! உனக்கு மணியான மணிமேகலை மனைவியாய்க் கிடைத்திருக்கிறாள்;

மணிமேகலை! உனக்கும் மணியான மாப்பிள்ளை அமைந்திருக்கிறார்; இருவரும் வளமுடன், நலமுடன் வாழ்க”

என்று வாழ்த்தினேன்;

அப்பொழுது ஒரு பழைய பாடல் என் நினைவில் ஓடியது; அந்தப் பாடலையும், அதன் இணைப்பையும் கீழே கொடுத்திருக்கிறேன்; கேட்டுப் பாருங்கள்.
மனம் போல் மாங்கல்யம் (1953) திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி நடிக்க, P.புல்லையா இயக்கத்தில் கவிஞர் கனகசுரபி எழுதி, ஏ.ராமாராவ் இசையமைப்பில் ஏ.எம்.ராஜா, பி.லீலா பாட, பாடல் ’பிருந்தாவன சாரங்கி’ யில் ஆரம்பித்து, ’சாரங்கா’ வில் முடிகிறது.

மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்
மை லேடி டோய் மை லேடி டோய்
மனம் போலே வந்து வாச்ச, பெண் ஜோடி டோய்

காப்பியிலே பல் தேய்க்கிற, மாப்பிள்ளை டோய்
கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்
(காப்பியிலே)

மாப்பிள்ளை டோய் மாபிள்ளை டோய்
மணியான மதராசு மாப்பிள்ளை டோய்

சோப்பாலே மூஞ்சி தோய்க்கிரா சுந்தரி டோய்
சுண்ணாம்பை, கொழச்சி பூசுரா, சுந்தரி டோய்
(சோப்பாலே)

மை லேடி டோய் மை லேடி டோய்
மனம் போலே வந்து வாச்ச பெண் ஜோடி டோய்

சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
மன்னாதி மன்னனுனு மன்னாதி மன்னனுனு,
மனசுக்குள்ளே நினைச்சிடுவார்

மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு மாப்பிள்ளை டோய்

பேயாண்டி தனைக் கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய்
பேயாண்டி தனைக் கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய்
பெண்களுக்(கு) அழகாகுமோ?

ஸா ரி ஸ
ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபடப மப
ஸா ரிஸ
ஸரிஸநி ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபதப
ஸரிமரி ஸநிதஸஸ ரிஸநித பமமப
தபம ரிக மகரிஸ

நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார்
நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார்
ஓயாத குறும்பை கண்டு, தீராத காதல் கொண்டேன்

யு ட்யூபில் இப்பாடலைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Mar-18, 12:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 208

சிறந்த கட்டுரைகள்

மேலே