தமிழ்

தொன்மையான மொழிகளுள்
நம் தமிழும் ஒன்று -ஏன் மிக
தொன்மையான மொழியோ
என்பர் ஆராய்ச்சியாளர் -இதன்
இலக்கியங்களும் இலக்கணமும்
சிறப்பானவை ஐயமேதுமில்லை
தேன் சிந்தும் மொழி எம் தமிழ்
அமுதென்றே அதற்க்கு பெயர்
என்பர் புலவர் பெருமக்கள்
எங்கள் தாய் எமக்குயிர் என்றால்
தமிழும் எமக்கு தாயே எம் உயிர்.


ஆனால் இன்றைய விஞான
தொழில் நுட்ப வளர்ச்சி விண்ணைத்தொட்டுவிட
போய்க்கொண்டிருக்கையில் ,
விஞான, தொழில் நுட்ப போதனைக்கு
ஆங்கிலமே பிரதான மொழியாய் இருக்க
ஆங்கிலம் தெரியாது வாழ்தல் அறியாமை
ஆங்கிலம் போல் ஜேர்மன்,பிரெஞ்சு மற்றும்
சீன யப்பானிய மொழிகள் விஞான
போதனைக்கு வெற்றி மொழியாய் இருக்க
இந்த தேசத்தவர் தம் மொழியில்தான்
பேசுவார், எழுதுவார் பெருமைப்படுவர்

நம் தமிழ் மொழியை போற்றும் நாம்
அம்மொழி ஒரு உயர்ந்த விஞான
மொழியாக உயர்த்தி அதிலே நம்
பள்ளிகளில், பல்கலை கழகங்களில்
போதிக்க இன்னும் வழி வகுக்கவில்லாதது ஏன்

வரும் சமுதாயம் இதை யோசிக்கவும்
நல்ல தமிழில் பேசிடுவோம் குழந்தைகளை
பேசவைப்போம் தமிழை
தொன்மொழியாய், இலக்கிய மொழியாய்
விஞான மொழியாய்

இதுவே தமிழுக்கு நாம் ஆற்றும்
அருந்தொண்டு என்பேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Mar-18, 8:22 am)
Tanglish : thamizh
பார்வை : 309

மேலே